பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்தார்.

Update: 2019-04-23 21:15 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர்கள் 2 பேரும் தமிழக நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக நான் தேர்வாகி இருப்பது பற்றி சசிகலாவிடம் தெரிவித்தேன். அதை கேட்ட அவர் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சசி கலாவை ஓரம்கட்டவில்லை. எங்கள் கட்சியில் சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்