காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - சோபூர் பகுதியில் 2-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்குள்ள சோபூர் பகுதியில் நேற்று 2-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-11 18:30 GMT
காஷ்மீர்,

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தளபதி இஸ்பாக் அகமது என்ற அப்துல்லா பாய் என்பவர் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக கூறி, வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாராமுல்லாவில் உள்ள சோபூர் ஆப்பிள் நகர பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நேற்று 2வது நாளாக அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. அங்கு உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்