மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது

மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு செய்த பா.ஜனதா பெண் பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2019-05-13 18:45 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா இளைஞரணி தலைவர் பிரியங்கா சர்மா. இவர் சமீபத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை, நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் ‘மார்பிங்’ செய்து இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக அவர் மீது புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

அவருக்கு ஜாமீன் கேட்டு மேற்கு வங்காளத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியாததால் நேற்று சுப்ரீம் கோர்ட்டிலேயே நேரடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி இந்த வழக்கை நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்