பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசியில் 57 சதவீதம் ஓட்டுப்பதிவு

பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் 57 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2019-05-19 20:07 GMT
வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் ஓட்டுப்பதிவு மிதமாகவே இருந்தது. ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்தது. அங்கு மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 57.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தொகுதியில் 18 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்களுக்காக 1,819 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 273 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டிருந்தன.

இங்கு வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறப்பு முகாம்களுக்கு உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்