உத்தர பிரதேசம்: 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் - 3 பேர் கைது

வெப் சீரிஸ் பார்த்துவிட்டு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update:2025-12-20 16:14 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மாணவியின் தந்தையை மிரட்டினர்.

இதையடுத்து போலீசார், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து குற்றவாளிகளின் இருப்பிடத்தை நெருங்கினர். போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்த கடத்தல்காரர்கள், அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தபோது போலீசார் 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

அதோடு, கடத்தப்பட்ட மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு பெண் உள்பட இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் வெப் சீரிஸ் ஒன்றை பார்த்துவிட்டு குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்