பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகளும் உயர்ந்துள்ளன.

Update: 2019-05-20 01:19 GMT
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.88 காசுகளாகவும் உள்ளது. 

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. ஏறத்தாழ 12 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்