பிரதமர் மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணத்திட்டம் கசிந்தது

பிரதமர் மோடி, 2-வது முறையாக பதவியேற்கும் முன்னரே, அவரின் அரசு முறையிலான வெளிநாட்டு பயண திட்டம் வெளியாகியுள்ளது.

Update: 2019-05-25 05:44 GMT
புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது முறையாக வரும் 30 ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.  

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. அதன்படி மோடி பதவி ஏற்ற பின் ஜூன் 13 ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மேலும் ஜூன் 28 -ல் ஜப்பான் சென்று 2 நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து நவம்பரில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று தெரியவந்துள்ளது. 

பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் விமர்சனத்திற்குள்ளாகின. இந்த சூழலில், அடுத்த 6 மாதத்திற்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டம் வெளியாகியிருக்கிறது. 

மேலும் செய்திகள்