தெலுங்கானாவில் 18 காங். எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி

தெலுங்கானாவில் 18 காங்.எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Update: 2019-06-06 11:11 GMT
ஐதராபாத்,

119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆக குறைந்தது. இந்தநிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா ராஷ்டிர  சமிதி கட்சியில் இணைய உள்ளனர். 

சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்து பேசிய 12 எம்.எல்.ஏ.க்களும் தெலுங்கானா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமதியில் இணைத்து விட்டதாக அங்கீகாரம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்