மாநில தலைமையை மாற்ற வலியுறுத்தல்; என்னை சுட்டுவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ஆவேசம்

மாநில தலைமையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதால் என்னை சுட்டுவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ஆவேசத்துடன் கூறினார்.

Update: 2019-06-07 01:05 GMT
சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் முன்னிலையில் சண்டிகரில் நடைபெற்றது. அப்போது 10 தொகுதிகளில் ஒன்றுகூட வெற்றிபெற முடியாததால் மாநில தலைவர் அசோக் தன்வாரை மாற்ற வேண்டும் என குல்தீப் சர்மா எம்.எல்.ஏ. கூறினார். இதனால் அவருக்கும், அசோக் தன்வாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பூபிந்தர்சிங் ஹூடாவின் ஆதரவாளர்கள் சிலரும் அசோக் தன்வாரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

குலாம்நபி ஆசாத் குறுக்கிட்டு தலைமை பொறுப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார், நீங்கள் ஒற்றுமையாக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றார். ஆனாலும் கடும் வாக்குவாதம் நீடித்தது. அப்போது ஆவேசமான அசோக் தன்வார், ‘‘என்னை முடித்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், என்னை சுட்டுவிடுங்கள்’’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்