மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கலாவதற்கு முன் டுவிட்டரில் வெளியான பட்ஜெட்டால் சர்ச்சை

மகாராஷ்டிர சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் டுவிட்டரில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-06-18 12:29 GMT
மகாராஷ்டிர சட்டசபையில் இரு அவைகள் உள்ளன.  இங்கு மாநில மந்திரி மற்றும் இணை மந்திரி ஆகிய இருவரும் முறையே கீழவை மற்றும் மேலவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வர்.

இந்த நிலையில், மாநில நிதி துறைக்கான இணை மந்திரி தீபக் கேசர்கர் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் அவர் அறிக்கையை வாசிப்பதற்கு முன், எதிர்க்கட்சி தலைவரான மேலவை உறுப்பினர் தனஞ்செய் முண்டே தனது மொபைல் போனை எடுத்து அதில் இருந்த பட்ஜெட் விவரங்கள் சிலவற்றை வாசித்து உள்ளார்.  இந்த விவரங்கள் நிதி மந்திரி சுதீர் முங்கந்திவார் பயன்படுத்தும் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு உள்ளன என அவர் கூறினார்.

சட்டசபையில் பட்ஜெட்டின் முதல் பகுதியை முங்கந்திவார் வாசிக்கும் முன்பே அவரது டுவிட்டர் கணக்கில் அந்த தகவல்கள் வெளியாகி விட்டன என கூறினார்.  இந்த விவகாரம் அவையில் சர்ச்சையை எழுப்பியது.

மேலும் செய்திகள்