மீனவர்களுக்கு கடற்சிப்பந்திகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

மீனவர்களுக்கு, கடற்சிப்பந்திகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக்லால் மாண்டவியா அறிவித்துள்ளார்.

Update: 2019-06-18 19:30 GMT
புதுடெல்லி,

மத்திய கப்பல் துறை இணை மந்திரி மன்சுக்லால் மாண்டவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 7,300 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் வாழும் மீனவர்களும், மக்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலை சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால் உலகளவில் இந்திய கடற் சிப்பந்திகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. உலகளவில் 50 லட்சம் கடற்சிப்பந்திகள் தேவைப்படுகிறார்கள். இந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளது.

எனவே இந்திய கடற்கரைகளில் வாழும் மீனவர்கள் மற்றும் மக்களுக்கு கடற்சிப்பந்திகளுக்கான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். 10 முதல் 15 நாட்கள் ஆரம்ப பயிற்சி அளிக்கப்பட்டதும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு கடற்சிப்பந்திகளுக்கான வேலை கிடைக்கும். அதன்பின்னர் அவர்களுக்கு அதில் உள்ள பல்வேறு பிரிவுகள் சார்பில் தனிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் 92 ஆயிரமாக உள்ள இந்திய கடற்சிப்பந்திகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்