அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் அரசு மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

Update: 2019-06-22 10:29 GMT
போபால்,

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் நேற்று மாலை ஹமீதியா அரசு மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  இதன்பின் அவர் இன்று காலை 9 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.  அவரது வலது கை விரலை மடக்கும்பொழுது அல்லது நீட்டும்பொழுது பிடிப்பது போன்று இருந்துள்ளது.  விரலில் வலியும் இருந்துள்ளது.

இதனால் அவருக்கு விரலில் அறுவை சிகிச்சை நடந்தது.  சில மணிநேரம் வரை அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளார்.  இன்று மாலை மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார்.

இதேவேளையில், மாநில காங்கிரஸ் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளரான நரேந்திர சலுஜா கூறும்பொழுது, பிற நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் தவிர்க்க, கட்சி தொண்டர்கள் யாரும் தன்னை காண மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கூறினார்.

கமல்நாத் ஜி, நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துகள்.  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது வரவேற்கத்தக்கது மற்றும் புகழத்தக்கது என கூறிய முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அதேவேளையில், நீங்கள் பெற்ற வசதிகள் பொது மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்