மக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி வழக்கு

மக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-06-26 21:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களை (55 பேர்) கொண்ட கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், காங்கிரஸ் உள்பட எந்த எதிர்க்கட்சிக்கும் அத்தனை எம்.பி.க்கள் இல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல்கள் மன்மோகன் சிங் நருலா, சுஷ்மிதா குமாரி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமையை சபாநாயகர் செய்யவில்லை. இது தவறான முன்னுதாரணமாகி விடும். ஜனநாயகத்தை நீர்த்துபோக செய்து விடும்” என்று கூறியுள்ளனர்.

இந்த மனு, நீதிபதிகள் ஜோதி சிங், மனோஜ் உரி ஆகியோர் முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஜூலை 8-ந் தேதி, உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்