மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-01 03:23 GMT
மும்பை,

மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. எனினும் தற்போது தீவிரமடைந்து பெய்து வருகிறது.  மும்பையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் கனமழை கொட்டி தீர்த்தது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜூன் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழைப்பொழிவில் இந்த 2 நாளில் 97 சதவீதம் பெய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், 3-வது நாளாக நேற்றும் மும்பையில் கனமழை பெய்தது. தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை பெற்று உள்ளன. தற்போது, ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ரெயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரெயில்வே போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்