அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாயக்கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2019-07-15 11:58 GMT
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கவுகாத்தியில் அபாயக்கட்டத்தை தாண்டி செல்கிறது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஷாதிகுல் ஹக் பேசுகையில், “ஆற்றில் வெள்ளம் அபாயக்கட்டத்தை தாண்டி 1.5 செ.மீ. உயரத்திற்கு செல்கிறது. அங்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தண்ணீரின் அளவு 2-3 செ.மீட்டர் உயர்கிறது. தண்ணீரின் அளவு உயர்வது நகரத்திற்கு ஆபத்தானது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்