கேரளாவில் ‘ரெட் அலர்ட்’

கேரளாவில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-16 21:13 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் நாளை (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக இடுக்கி, மலப்புரம், வயநாடு, கன்னூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பொதுமக்களை முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கேரளா - லட்சத்தீவு இடையே 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்