வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் - மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-18 14:53 GMT
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இவ்விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் கடந்த மே 31–ந் தேதி நிலவரப்படி, 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவித்தார்.  இவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகஅளவாக, சவுதி அரேபிய சிறைகளில் ஆயிரத்து 811 இந்திய கைதிகள் உள்ளனர். இந்த இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பை பெற்றுத்தர தூதரகங்கள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2016–ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை, வளைகுடா நாடுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு கிடைத்திருக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்