பஞ்சாபில் கனமழை எதிரொலி: நேரு அடைக்கப்பட்ட ஜெயில் அறை இடிந்தது

பஞ்சாபில் கனமழை காரணமாக, நேரு அடைக்கப்பட்ட ஜெயில் அறை இடிந்து விழுந்தது.

Update: 2019-07-18 19:16 GMT
சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு பரித்கோட் மாவட்டம் ஜைட்டு நகரில் உள்ள ஒரு ஜெயில் அறை, மழையால் இடிந்து விழுந்தது. இந்த அறை, வரலாற்று பின்னணியை கொண்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1923-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி, அப்போதைய நாபா சமஸ்தானத்தில் இருந்த ஜைட்டு நகருக்கு தடை உத்தரவை மீறி ஜவகர்லால் நேரு வந்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டு, இந்த ஜெயில் அறையில் வைக்கப்பட்டார்.

அன்று முழுவதும் அதில் இருந்த நேரு, மறுநாள் நாபா சிறைக்கு மாற்றப்பட்டார். அவருடன் கே.சந்தானம், ஏ.டி.கித்வானி என்ற காங்கிரஸ் பிரமுகர்களும் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த அறை, வெறும் 240 சதுர அடி கொண்ட அறை ஆகும்.

மேலும் செய்திகள்