மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணிநேரங்களில் கலைத்துவிடலாம், சிக்னலுக்காக காத்திருக்கிறோம் -பா.ஜனதா தலைவர்

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரங்களில் கலைத்துவிடலாம், தலைமையின் சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என பா.ஜனதா தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார்.

Update: 2019-07-24 11:38 GMT
பா.ஜனதா தலைமையின் நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறியுள்ளார் கோபால் பார்கவா.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ம.பி. காங்கிரஸ் முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இங்கு விற்பனைக்கு கிடையாது, எப்போது  பா.ஜனதா  நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரினாலும் அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் எனக் கூறியுள்ளார். 

231 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மாநில சட்டசபையில் 121 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கமல்நாத் கூறியுள்ளார். 2018-ல் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பா.ஜனதா 109 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்