வெளியுறவு மந்திரியின் பெயரை ‘ஜெய்சங்கர் பிரசாத்’ என தவறாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்

வெளியுறவு மந்திரியின் பெயரை ஜெய்சங்கர் பிரசாத் என ராஜ்நாத் சிங் தவறாக குறிப்பிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-24 20:49 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார். எனினும் இதை பின்னர் அமெரிக்கா மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று விளக்கம் அளித்தார்.

அப்போது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் பெயரை 3 முறை தனது விளக்கத்தில் குறிப்பிட்டார். அதில் ஒவ்வொரு முறையும் அவரது பெயரை ‘ஜெய்சங்கர்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய்சங்கர் பிரசாத்’ என குறிப்பிட்டார். ஜெய்சங்கர் பிரசாத், பிரபல இந்தி மொழி எழுத்தாளர் ஆவார்.

ஜெய்சங்கரின் பெயரை ராஜ்நாத் சிங் தவறாக குறிப்பிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அவர் உரையாற்றும் போது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங்குக்கு வலது புறத்தில் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்