போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-25 09:21 GMT
சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரிப்பு மற்றும் இதுதொடர்பான  வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்குவதை கவனத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.  இந்நீதிமன்றங்களை மத்திய அரசு 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வகையான நீதிமன்றங்கள் மத்திய அரசால்  அமைக்கப்பட வேண்டும். கட்டமைப்பு உள்பட பல்வேறு செலவினங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்