நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-07-25 12:45 GMT
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது.  தேர்தலுக்கு பின் நாடாளுமன்றம் ஜூன் 17-ல்  முதன் முதலாக கூடியது.  கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி முடியும் என தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா கூட்டணி அரசின் முக்கிய மசோதாவான முத்தலாக் தடை மசோதா நீண்ட காலமாகவே கிடப்பில் கிடக்கிறது. இம்மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜனதா அரசு அதிதீவிரம் காட்டுகிறது. மசோதா மீது விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அமளியும் தொடர்கிறது. எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டம் நாளை முடியவுள்ளது. இப்போது முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் வண்ணம் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்