வதந்திகளை நம்ப வேண்டாம்: காஷ்மீர் ஆளுநர் வேண்டுகோள்

வதந்திகளை நம்ப வேண்டாம் என காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-03 01:21 GMT
ஸ்ரீநகர், 

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

 அது போக காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் வதந்திகள் பரப்பப்பட்டன. 

ஆனால், இவற்றை திட்டவட்டமாக மறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில்,  ஆளுநர் சத்யபால் மாலிக்கை,  முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல்வாதிகள் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது,  ”தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள். அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க  தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே, இவை முழுக்க முழுக்க பாதுகாப்பு நடைமுறையே ஆகும்” என ஆளுநர் கூறியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்