ஜம்மு-காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2019-08-03 12:20 GMT
ஜம்மு காஷ்மீர்,

அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து யாத்திரை ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் அரசு நேற்று (ஆக.,02) அறிவித்தது. அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக திரும்பி வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது.  காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை சி-17 குளோப்மாஸ்டார் போக்குவரத்து விமானத்தில் யாத்ரீகர்களை கொண்டுவர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்