சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-08-06 17:47 GMT

புதுடெல்லி,

கடந்த பாஜக ஆட்சியின் போது  மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோர் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்