உன்னாவ் சிறுமி கற்பழிப்பு வழக்கு: எம்.எல்.ஏ. மீது ‘போக்சோ’ சட்டம் பாய்ந்தது

உன்னாவ் சிறுமி கற்பழிப்பு வழக்கில், எம்.எல்.ஏ. மீது ‘போக்சோ’ சட்டம் பாய்ந்தது.

Update: 2019-08-09 22:27 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். இவ்வழக்கு சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், குல்தீப் செங்கார் மீது டெல்லியில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேஷ் சர்மா நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் பெண், கடந்த மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததை அடுத்து, குல்தீப் செங்கார், பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்