எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்

எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

Update: 2019-08-13 13:06 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை எடுக்கும் பாகிஸ்தானின் ராணுவப் படைகள் எல்லையில் குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பாதுகாப்பு படையினரை குவிப்பது தொடர்பாக கவலைப்பட வேண்டியது எதுவும் கிடையாது, எந்தஒரு பாதுகாப்பு சவாலையையும் எதிர்க்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அதிகமான படைகளை குவிக்கிறது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம், இது இயல்பானது. இதுதொடர்பாக கவலையடைய எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் பிபின் ராவத்.

மேலும் செய்திகள்