காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு திரும்பினார், சிபிஐ அதிகாரிகள் முற்றுகை

காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

Update: 2019-08-21 15:30 GMT

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க நேற்று மறுத்துவிட்டது. அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனுதொடர்பாக இன்று  விசாரணையில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிபிஐயையும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அவருடைய முன்ஜாமீன் மனு தொடர்பாக வெள்ளிக்கிழமையே விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனக்கு எதிராகவும், தனது குடும்பத்தினருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றார். மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய பின்னர் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு திரும்பினார். அவர் பின்னால் சிபிஐ அதிகாரிகளும் சென்றனர். அவர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.  எனவே சிதம்பரம் வீட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்