புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை - மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-21 22:13 GMT
புதுடெல்லி,

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் புதிய வலைத்தளத்தை மத்திய மந்திரி நிதின்கட்காரி தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ அமல்படுத்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த சட்டத்தில் உள்ள அபராதம், லைசென்ஸ், பதிவு, தேசிய போக்குவரத்து கொள்கை போன்ற 63 பிரிவுகளுக்கு புதிய விதிகளை நிர்மானிக்க தேவையிருக்காது. அவைகள் சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

இவை தவிர மற்ற சட்டப்பிரிவுகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த நடவடிக்கைகள் முடிவடைந்ததும் விதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் ஊழல் இல்லாத, பாதுகாப்பான சாலை போக்குவரத்தை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்