இன்று மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்துகிறது சிபிஐ

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-08-22 06:55 GMT
புதுடெல்லி,

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. வயது மூப்பு, மருத்துவ தேவை காரணமாக ப.சிதம்பரத்திற்கு இரவில் ஓய்வு அளிக்கப்பட்டது. 

ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது. இதுவரை முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தற்போது தேவையற்றதாகி விட்டது.

இதனிடையே, ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்