காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Update: 2019-08-22 14:02 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, படிப்படியாக அங்கு  இயல்பு நிலை திரும்பி வருகிறது. காஷ்மீரில் 18-வது நாளாக செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. எனினும்,  சந்தைப்பகுதிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது வரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைதி நீடிப்பதாகவும் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை. எனினும், வாடகை கார்கள் அதிக அளவில் இயங்குவதை காண முடிகிறது. ஆட்டோ ரிக்‌ஷாக்களும் எப்போதும் பரப்பரப்பாக இயங்குகின்றன. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இயல்பான அளவில் இருப்பதை காண முடிகிறது. 

ஆனால், மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. அரசு அலுவலங்களிலும் ஊழியர்கள் வருகை எப்போதும் போல் காணப்பட்டது.  ஸ்ரீநகர் உள்பட காஷ்மீரில் பெரும்பாலன இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்