பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு முத்தலாக் வழங்கிய கணவர்

பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு கணவர் முத்தலாக் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-08-24 01:15 GMT
அயோத்தியா,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ஐதர் கஞ்ச் பகுதியில் ஜனா பஜார் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜாப்ரின் அஞ்சும் (வயது 23).  இவருக்கு ஆஸ்திகர் அகமது என்பவருடன் கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது.

இருவரும் மகாராஜ்கஞ்ச் பகுதிக்குட்பட்ட நகத்வாரா கிராமத்தில் கணவரின் ஊரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக தனது கணவர் முத்தலாக் வழங்கியுள்ளார் என போலீசில் ஜாப்ரின் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்தில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி என்னுடைய கணவர் தொடர்ந்து துன்புறுத்தினார்.  ஆனால், எனது தந்தையால் அவர்  கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.  இதனால் துன்புறுத்தல் தொடர்ந்தது.  இதனிடையே, எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் கடந்த 18ந்தேதி முத்தலாக் வழங்கி விட்டார்.  எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவரது புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்