வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை; ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது- நிர்மலா சீதாராமன்

வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை; ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2019-08-30 11:29 GMT
புதுடெல்லி,

டெல்லியில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* குறைந்த அளவிலான கடன் வழங்குவது 20. 5 சதவீதம் அதிகரித்து உள்ளது.

* வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை.  ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

*  வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படும். மேலும் அவை 17.95 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவாகும்.

* இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி இணைந்து அவை ரூ .8.08 லட்சம் கோடி வணிகத்துடன் ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.

* கனரா வங்கி சிண்டிகேட் வங்கியுடன் இணைந்து அவை ரூ. 15.20 லட்சம் கோடி வணிகத்துடன் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.

* யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இணைந்து  இப்போது ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாறும் என கூறினார்.

மேலும் செய்திகள்