நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Update: 2019-09-09 02:00 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் சுற்றுச்சுழல்  அழிவு,  பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு  நொய்டாவில்  இன்று காலை 11.15 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் , நில மேலாண்மை தொடர்பான உலகளாவிய சொற்பொழிவை அதிகரிக்கும் என பிரதமர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

கால நிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 1994 ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரீசில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.  இந்தியா உள்பட 196 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது  என்றுபிரதமர் மோடி கூறினார். காலநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் நிலம் தொடர்பான மூன்று ரியோ மாநாடுகளின் சிஓபி யை நடத்துவதற்கான பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்