சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல்

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வாதாடிய நீதிபதி விலகி உள்ளார்.

Update: 2019-09-17 07:08 GMT
புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டனர். இதனால் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து நேற்று நீதிபதி எம்.சந்தானகவுடர் விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று மட்டும் தெரிவித்தார். பதிவாளர் துறை இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டது.

விசாரணையில் இருந்து விலகிய எம்.சந்தானகவுடர் 2003-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்