தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-09-18 17:53 GMT
புதுடெல்லி,

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரி, எஸ்.ஆர்.பட், ரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய சட்டத்துறை தெரிவித்து உள்ளது.
இவர்களில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.  இமாசலபிரதேசத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கிறார். மேலும் எஸ்.ஆர்.பட் ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், ரிஷிகேஷ் ராய் கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கிருஷ்ணா முராரி பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் இருந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்