”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு

”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” என ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

Update: 2019-10-03 10:26 GMT
புதுடெல்லி

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது  நீதிமன்றக்காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை வரும் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், சிறைக்குள் வழங்கப்படும் உணவு பழக்கமில்லை என்பதால் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும்  கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் ஜாமீன் மனுவில் கூறி இருப்பதாவது;-

ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச 15 நாட்கள் உட்பட 42 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஆகவே, அவரது  காவலை எடுத்துக்கொள்ளவோ அல்லது விசாரணையின் நோக்கத்திற்காக தேவையில்லை என்பதாலோ, அவரை தொடர்ந்து சிறையில் அடைப்பது தண்டனை வடிவத்தில் உள்ளது.

அவரது உடல்நிலை பலவீனமாக உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு  அவருக்குப் பழக்கமில்லாத உணவைக் கொடுத்துள்ளனர். நீதித்துறை காவலில் இருந்த காலத்தில் அவர் ஏற்கனவே 4 கிலோ எடை குறைந்துள்ளார்  என கூறப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரத்தின் வேண்டுகோளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்து பரிசீலிப்பார் என்று நீதிபதி ரமணா கூறினார்.

மேலும் செய்திகள்