பிரதமர் வருகைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றனவா? -எதிர்க்கட்சிகள் கேள்வி

புனேவில் பிரதமர் மோடி, நாளை பங்கேற்க உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மைதானத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Update: 2019-10-16 07:10 GMT
புனே, 

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  அனல் பறக்கும் பிரசாரத்தில் இரு கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், புனேவில் நாளை பிரதமர் மோடி, பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை பிரதமர் மோடி புனே வருகை தர உள்ள நிலையில், தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ள கல்லூரி வளாகத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ள பாஜக,  பிரதமர் நிகழ்சிக்கும் மரங்கள் வெட்டப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், மழை மற்றும் இயற்கை சீற்றங்களின் போது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த மரங்களின் கிளைகள், மாணவர்கள் பாதுகாப்பு கருதியே வெட்டப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்