புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது - பிரதமர் மோடி

புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2019-11-09 13:24 GMT
புதுடெல்லி,

அயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. புதிய இந்தியாவை உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது.

நமது ஜனநாயகம் எவ்வளவு பல பொருந்தியது என்று உலகமே கண்டுள்ளது. நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  இதே நவம்பர் மாதம் 9-ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, அதேபோல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நவம்பர் 9-ம் தேதியும் வரலாற்றில் நினைவு கூறப்படும்.  

ஒட்டு மொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்