சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-09 21:17 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் அயோத்தி வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி முதல் விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் நடைபெற்று வந்தது. 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கிறார். எனவே அதற்கு முன்னதாக தீர்ப்பை வழங்கவேண்டும் என்ற வகையில், அவரது தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பை கூறியது.

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.

“சில ஆபூர்வமான சூழ்நிலைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரவிலும் கூட வழக்கு விசாரணைகள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால் எனக்கு தெரிந்த வகையில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை. அநேகமாக இப்போதுதான் முதன் முதலாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன்” என்று தலைமை நீதிபதியின் முதன்மை தனிச்செயலாளர் எச்.கே.ஜூனேஜா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்