தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள்; 35 பேர் காயம்

தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள் ஏற்பட்டதில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2019-11-11 07:27 GMT
கச்சிகுடா,

தெலுங்கானாவின் கச்சிகுடா நகரில் நிம்போலி அட்டா பகுதியருகே கொங்கு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயமடைந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றிய தகவலில், நின்று கொண்டிருந்த கொங்கு எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதியுள்ளது.  சிக்னல் கோளாறால் இந்த சம்பவம் நடந்து உள்ளது என கூறப்படுகிறது.  ரெயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து உடைந்த பெட்டிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் பல்வேறு ரெயில்களின் சேவை அந்த பகுதியில் பாதிப்படைந்து உள்ளது.

இந்த நிலையில், ஐதராபாத் நகரில் லிங்கம்பள்ளியில் இருந்து பலக்னுமா செல்லும் ரெயிலின் 3 பெட்டிகள் மற்றும் கர்னூல் நகரில் இருந்து செகந்திராபாத் செல்லும் ஹண்ட்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன.  இதில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்