ராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி - மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது

ராமர் கோவில் கட்டுவதற்கு 10 கோடி ரூபாய் மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்க உள்ளது.

Update: 2019-11-11 21:59 GMT
அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் விலகியதால் கோவில் கட்ட பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்க முன்வந்துள்ளன. பீகாரில் உள்ள மகாவீர் சேவா அறக்கட்டளை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் நன்கொடை வழங்கவும், ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் தயார் என்று அறிவித்துள்ளது. கோவிலை இப்போது கட்டத் தொடங்கினால், 200 கலைஞர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டால் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் என்று கோவிலுக்காக கற்களை செதுக்கும் ராமஜென்மபூமி நியாஸ் காரியசாலை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்