டிசம்பர் 2-ம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும்

டிசம்பர் 2-ம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை அறிவிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2019-11-18 09:06 GMT
புதுடெல்லி,

3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான  வழக்கில்  உள்ளாட்சித் தேர்தல் விவரங்களை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு   உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்