பணி நீக்க பட்டியலில் இடம் பெற்றதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சோகம்

பணிநீக்க பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதால், தெலுங்கானாவில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-11-21 13:38 GMT
ஐதராபாத்,

பணிநீக்க பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதால், தெலுங்கானாவில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த இளம்பெண் ஹரிணி (24) கடந்த 2 வருடங்களாக ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஜுனியர் சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆக  பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக, ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி,  தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், தனது நிறுவனத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட பணிநீக்க பட்டியலில், ஹரிணியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த அவர்,  தனது சகோதரரிடம் இது தொடர்பாக விவாதித்துள்ளார்.  

எனினும், மன உளைச்சலில் இருந்து மீண்டு வரமுடியாத ஹரிணி, தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்