தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது : மத்திய அரசு

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-11-22 07:31 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, பதிலளிக்கையில், இந்த தகவலை வெளியிட்டார்.

தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும், நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும்  மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்