ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2019-12-03 23:15 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிக்கினார். அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆனால், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. டெல்லி ஐகோர்ட்டு அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த வியாழக்கிழமை விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. எனவே ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரிய வரும். இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டால், 100 நாட்களுக்கு மேலான சிறைவாசத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியே வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்