கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை, தியாகம் வலிமையான நாட்டை உருவாக்கி உள்ளது; பிரதமர் மோடி

கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை, தியாகம் வலிமையான நாட்டை உருவாக்கி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-04 05:03 GMT
புதுடெல்லி,

இந்திய கடற்படை நாட்டிற்கு ஆற்றிய பங்கு மற்றும் அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் 4ந்தேதி பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான போரில் பி.என்.எஸ். கைபர் உள்ளிட்ட 4 பாகிஸ்தானிய கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது.  இதில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதனை அடுத்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 4ந்தேதி கடற்படை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பிரதமர் மோடி கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை மற்றும் தியாகம் ஆகியவற்றால் நமது தேசம் வலிமை நிறைந்த மற்றும் பாதுகாப்புமிக்க நாடாக உருவாகியுள்ளது.  கடற்படை தினத்தில் நம்முடைய தைரியம் நிறைந்த கடற்படை வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்