என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி

என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Update: 2019-12-04 10:20 GMT
ராஞ்சி ( ஜார்கண்ட்),

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று விடுதலையாகிறார். 

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:  “ப.சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றம் உரிய முடிவை எடுக்கும்.

நாங்கள் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீதும் என் மீதும் பொய் வழக்குகளை தொடுத்தார். இந்த வழக்குகளில் நாங்கள் நிரபராதி என்பதை பின்பு நிரூபித்தோம்” என்றார்.

மேலும் செய்திகள்