தடுமாறி கீழே விழ முயன்ற பிரதமர் மோடி; சுதாரித்து உதவிய பாதுகாப்பு வீரர்கள்!

தடுமாறி கீழே விழ முயன்ற பிரதமர் மோடியை பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக சுதாரித்து உதவி செய்தனர்.

Update: 2019-12-14 15:44 GMT
கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கங்கை ஆற்று குழுவின் முதற்கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில் கங்கையாற்றை புனரமைப்பது, பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து  அடல் காட் பகுதியில் கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்து ஆய்வுகளை பிரதமர் மோடி மேற்கொண்டார். 

ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு படகில் திரும்பிய மோடி படியில் கரையேறும் போது திடீரென கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரித்து உடனடியாக பிரதமருக்கு உதவி செய்தனர். இதனால், அந்த இடத்தில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்