எம்.பி தொகுதிகளை 543-லிருந்து 1000-ஆக உயர்த்த வேண்டும் -பிரணாப் முகர்ஜி

மக்களவையின் இடங்களை 543-லிருந்து ஆயிரம் இடங்களாக உயர்த்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-17 06:03 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2-வது ஆண்டு  நினைவு தினத்தில் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை  நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய வாக்காளர்கள் 1952 முதல் வெவ்வேறு கட்சிகளுக்கு வலுவான பெரும்பான்மையை வழங்கியிருக்கலாம், ஆனால் அவர்களில் 50% க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிக்கவில்லை. தேர்தல்களில் எண்ணிக்கையிலான பெரும்பான்மை ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்குகிறது. மக்கள் பெரும்பான்மை இல்லாதது உங்களை ஒரு பெரும்பான்மை அரசாங்கத்திலிருந்து தடைசெய்கிறது. அதுதான் நமது பாராளுமன்ற ஜனநாயகத்தின் செய்தியும் சாரமும்.

தற்போது மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கை 1971-ம் ஆண்டு மக்கள்  தொகை கணக்கெடுப்பின் படி 1977-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.

அப்போதிருந்த மக்கள் தொகை தற்போது இரட்டிப்பாகியிருப்பது. அதற்கேற்ற வகையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள 543-லிருந்து மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த சேண்டும். மாநிலங்களவையின் வலிமையை அதிகரிக்கவேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்